டாஸ் வென்று பேட்டிங் செய்யும் மும்பை: மாறுகிறதா டிரெண்ட்?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது
இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன புள்ளி பட்டியலில் 3வது மற்றும் 4வது இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பந்துவீச்சை தேர்வு செய்து தோல்வி அடைந்த நிலையில் தற்போது பேட்டிங் எடுக்கும் டிரண்ட் மாறி வருகிறது.
இந்த நிலையில் மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் ஐதராபாத்த் அணியில் காயம் காரணமாக புவனேஷ் குமார் இன்று விளையாட வில்லை என்று தெரிகிறது. இரு அணியில் விளையாடும் 11 பேர் அணி பின்வருமாறு:
மும்பை; டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்டே, க்ருணால் பாண்டே, பாட்டின்சன், சாஹர், டிரெண்ட் போல்ட் மற்றும் பும்ரா,
ஐதராபாத்: வார்னர், பெயர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், கார்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமது, ரஷித் கான், கெளல், நடராஜன், சந்தீப் சர்மா,