Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரவுண்ட் தீப்பிடிக்கும்.. ஒருத்தன் வந்தா படை நடுங்கும்! – மாஸ் காட்டிய தோனி!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:23 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில் தோனியின் அட்டகாசமான ஆட்டம் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ஜாம்பவான் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. இரண்டாவதாக களம் இறங்கிய சிஎஸ்கே அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது அதிர்ச்சியை அளித்தது.

உத்தப்பா மற்றும் ராயுடு ஓரளவு சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தாலும் 15 ஓவர்களுக்குள் அவர்களும் அவுட் ஆனார்கள். அணி கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஜடேஜா 8 பந்துகளில் 3 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியாக தோனியும், ப்ரெட்டோரியஸும் வெற்றிக்காக முயற்சித்து வந்த நிலையில் சில பவுண்டரிகள் அடித்த ப்ரெட்டோரியஸும் விக்கெட்டை இழந்தார். கடைசி 6 பந்துகளில் 17 ஓவர்கள் தேவை என்ற நிலையில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டினார் தோனி.

முதலில் ஒரு சிக்ஸர், அடுத்து இரண்டு பவுண்டரிகள், இடையே சில ரன்கள் என 17 ரன்களை ஒரே ஓவரில் குவித்து சிஎஸ்கேயை த்ரில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வரும் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி குறித்த ஹேஷ்டேகுகள், மற்றும் ஸ்பெஷல் வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

KKR க்கு எதிராக வெற்றி பெற்ற போதும் விமர்சிக்கப்படும் மும்பை கேப்டன் ஹர்திக்… என்ன காரணம்?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அறிமுக பவுலர் அஸ்வானி குமார் அபாரம்.. முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments