Publish Date: Fri, 22 Apr 2022 (00:18 IST)
Updated Date: Fri, 22 Apr 2022 (00:20 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் சிங்கிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.
இதில், டாஸ் வென்றா சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா டாஸ் வென்று, பவுலிங் தேர்வு செய்தார். எனவே மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், வர்மா 51 ரன்களும், ஷோகீன் 25 வ், பொல்லார்ட் 14 வ, உங்கட் 19 ரன்ளும், அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
சென்னை அணியில் பிராவோ 2 விக்கெட்டும், பவுத்ரி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். சென்னை அணிக்காக பிராவோ இதுவரை 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்துப் பேட்டிங் செய்த சென்னை அணியில், ராயுடு 40 ரன்களும், உத்தப்பா 30 ரன்களும், தோனி 28 ரன்களும் எடுத்தனர், 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மும்பை அணியில் டெனியல் 4 விக்கெட்டும், ஜெயதேவ் 2 விக்கெட்டும், ரெயிலி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Sinoj
Publish Date: Fri, 22 Apr 2022 (00:18 IST)
Updated Date: Fri, 22 Apr 2022 (00:20 IST)