Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் சாதனைகள் புரிந்தேன்! முகமது யூசுப் நெகிழ்வு!

Advertiesment
இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் சாதனைகள் புரிந்தேன்! முகமது யூசுப்  நெகிழ்வு!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (16:10 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் இஸ்லாம் மதத்துக்கு மாறிய பின்னரே சாதனைகள் புரிந்தேன் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டுக்க் அளித்த மிகச்சிறந்த வீரர்களில் முகமது யூசுப்பும் ஒருவர். பிறப்பில் கிறிஸ்தவரான அவர் (யூசுப் யுஹானா) 2005 ஆம் ஆண்டு இஸ்லாமியராக மாறினார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் அவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 1,788 ரன்களை விளாசுகிறார். இதில் 9 சதங்கள் அடங்கும். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை அவர் முறியடித்தார்.

இந்நிலையில் தனது இந்த சாதனைக்கு இஸ்லாமியனாக மாறியதேக் காரணம் என்று இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை யாரும் முஸ்லீம் ஆக மாற சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்றும் தான் முஸ்லீமாக மாற சயித் அன்வரின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்ததுதான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வின் உள்ளே வரவேண்டும் என்றால் சுந்தர் மோசமாக விளையாடவேண்டும் – கோலி பதில்!