Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தைக்கு மிகச்சிறந்த அஞ்சலியை செலுத்திய முகமது சிராஜ்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:43 IST)
இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இதற்காக ஆஸ்திரேலியா சென்று பயிற்சி பெற்றுவரும் நிலையில் இந்தியாவில் அவரது முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்சனைக் காரணமாக மரணமடைந்தார். ஆஸ்திரேலியாவில் பயோ பபுளில் சிராஜ் இருந்த நிலையில் அவரை இந்தியா அனுப்ப கிரிக்கெட் வாரியம் தயாராக இருந்தும் முகமது சிராஜ்  அங்கேயே இருக்க முடிவு செய்தார்.

அப்போது சகோதரர் இஸ்மாயிலிடம் சிராஜ் ஆஸ்திரேலிய தொடரை சிறப்பாக விளையாடி கைப்பற்றி அந்த வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக்குவேன் எனக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 5 விக்கெட்களைக் கைப்பற்றி தனது தந்தைக்கு வெற்றியைக் காணிக்கையாக்கியுள்ளார் சிராஜ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments