Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்காக பலிகடா ஆகப்போவது இவர்தானா? தப்பித்த புஜாரா!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (10:17 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் நடக்க உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருக்கிறார். இதனால் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் 170 ரன்களை சேர்த்து தனது தேர்வு சரிதான் என நம்பவைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கோலி வரும் போது அவருக்கு வழிவிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் துணைக் கேப்டன் ரஹானேதான் வழிவிட வேண்டி இருக்கும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ரஹானேவின் கடைசி போட்டியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது.

ஆனால் இப்போது புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு மயங்க் அகர்வால் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரரான அவரை நீக்கினால் அவரது இடத்தில் யார் இறங்குவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments