Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெண்கலம் வென்று சாதனை படைத்தார் மேரி கோம்..

Advertiesment
வெண்கலம் வென்று சாதனை படைத்தார் மேரி கோம்..

Arun Prasath

, சனி, 12 அக்டோபர் 2019 (11:29 IST)
உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

ரஷ்யாவின் உலான்-உடே பகுதியில், உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 51 கிலோ எடை பெரிவில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கு பெற்றார். இந்த தொடரின் முதல் சுற்றில் அவருக்கு ”பை” அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் தாய்லாந்து நாட்டின் ஜூடாம்ஸ் ஜிட்போங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதி போட்டியில், கொலம்பியா வீராங்கனை வெலன்சியா விக்டோரியாவுடம் மோதினார். அதில் விக்டோரியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை புஸ்னாஸ் ககிரோக்லுவிடம் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார். எனிமும் மேரி கோம் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

முன்னதாக மேரி கோம் 6 தங்கம், ஒரு வெள்ளி என 7 பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது 8 ஆவது பதக்கமாக வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாம் நாள் – மடமடவென விக்கெட்டை இழக்கும் தென் ஆப்பிரிக்கா !