Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரட்டை சதம் அடித்து விளாசிய கோலி..

Advertiesment
இரட்டை சதம் அடித்து விளாசிய கோலி..

Arun Prasath

, வெள்ளி, 11 அக்டோபர் 2019 (15:59 IST)
தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுவரும் நிலையில், விராட் கோலி இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார்.

தென் ஆஃப்ரிக்காவுடன் இந்திய அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது நாளான இன்று ரஹானே அரை சதம் அடித்த நிலையில், துரிதமாக விளையாடிய விராட் கோலி, 336 பந்துகளில் 254 ரன்கள் அடித்துள்ளார். இதில் 33 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இது அவருக்கு 7 ஆவது இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக் ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோஹ்லி இரட்டைச்சதம் –ரன் மெஷினின் இரு சாதனைகள் !