டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று லைக்கா கோவை அணிக்கும் காரைக்குடி காளை அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷாருக்கான் 59 ரன்களும், கேப்டன் முகுந்த் 32 ரன்களும் ரஞ்சன் பால் 18 ரன்களும் எடுத்தனர்
இதனை அடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய விளையாடிய காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து, 15 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணியிடம் தோல்வி அடைந்தது. காரைக்குடி அணியின் ஷாஜகான் 41 ரன்களும் அனிருத்தா 24 ரன்களும், பஃப்னா 21 ரன்களும், எடுத்தனர் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கோவை அணியும் ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
இந்த வெற்றியை அடுத்து கோவை அணியின் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது என்பதும், காரைக்குடி காளை அணி இரண்டே புள்ளிகள் மட்டும் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது