Publish Date: Sun, 04 Aug 2019 (16:44 IST)
Updated Date: Sun, 04 Aug 2019 (16:48 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, தனது டிவிட்டர் பதிவில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஸ்டார் வீரரான ஹர்பஜன் சிங் சமீபகாலமாகவே தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே பகிர்ந்து வருகிறார். எந்த ஒரு விசேஷ தினமானாலும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை கூறும் ஹர்பஜன் சிங், இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சமீபத்தில் இளைஞர்களிடம் ட்ரெண்டான “கும்பலாக சுத்துவோம், நாங்க அய்யோ அம்மா ன்னு கத்துவோம்” என்ற பாடலின் வரிகளை பயன்படுத்தியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பதிவை குறித்து பல Meme-களும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன.
webdunia
Publish Date: Sun, 04 Aug 2019 (16:44 IST)
Updated Date: Sun, 04 Aug 2019 (16:48 IST)