Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசிப்பந்தில் துல்லிய யார்க்கர் – விக்கெட்டோடு விடைபெற்ற மலிங்கா !

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (14:26 IST)
சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மலிங்கா தனது கடைசிப் பந்தில் யார்க்கர் வீசி விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் மலிங்கா. தனது ஏர்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நடனமாட வைத்த இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தோடு அண்மைக் காலமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட மலிங்கா இப்போது சர்வதேசப் போட்டிகள் அனைத்தில் இருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மலிங்கா வங்க தேச அணியுடனான தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடினார் மலிங்கா. இந்தப்போட்டியில் 9.4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் தனது கடைசி பந்தில் துல்லியமாக யார்க்கர் வீசி விக்கெட்டை வீழ்த்தி விடைபெற்றார். இதுவரை 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் இலங்கை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments