Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராலிம்பிக்ஸ் போட்டியில் 5வது தங்க பதக்கம்! – வேற லெவல் காட்டும் இந்தியா!

Advertiesment
பாராலிம்பிக்ஸ் போட்டியில் 5வது தங்க பதக்கம்! – வேற லெவல் காட்டும் இந்தியா!
, ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (10:01 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்தியா மொத்தம் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND- ENG 4 வது டெஸ்ட்: இந்தியா 3 விக்கெட்டிற்கு 270 ரன்கள்