Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அபார வெற்றி, 8ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடம்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (07:25 IST)
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அபார வெற்றி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. கேப்டன் மோர்கன் மிக அபாரமாக விளையாடிய 68 ரன்களும் திரிபாதி 39 ரன்களும் கில் 36 ரன்களும் எடுத்தனர் 
 
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் கிட்டத்தட்ட சொதப்பினார்கள். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நேற்று கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று போட்டி தொடங்கும் முன்னர் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, நேற்றைய ஒரே வெற்றியின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments