இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நிரந்தரமான 5 மைதானங்களில்தான் நடக்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூனு டெஸ்ட் போட்டிகளையும் வென்று வொயிட் வாஷ் செய்துள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் எந்தவொரு பரபரப்பும் இல்லாமலே சென்றது.
இந்நிலையில் தொடர் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய கோலி முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 5 மைதானங்களிலும் இங்கிலாந்தில் 7 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல இந்தியாவிலும் நிரந்தர மைதானம் வேண்டாமா என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கோஹ்லி ‘நீண்ட காலமாக இதனை விவாதித்து வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் உற்சாகமாக, சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நிரந்தரமான பிரதான விளையாட்டு மையங்கள் தேவை என்பது உண்மைதான். எனவே வலுவான நிரந்தரமான மைதானங்கள் தேவை. அப்போதுதான் தாம் எங்கே விளையாடப் போகிறோம் என்பது வெளிநாட்டு அணிகளுக்குத் தெரியும். பல மைதானங்களில் கூட்டமே வருவதில்லை.’ எனக் கூறியுள்ளார்.