“ஓய்வு அறைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி” வைரல் புகைப்படங்கள்

Arun Prasath

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:57 IST)
ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா-தென் ஆஃப்ரிக்கா டெஸ்ட் போடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஓய்வு அறைக்கு தோனி வருகை தந்தார்.

ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆஃப்ரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனின் விருதையும் பெற்றார்.

போட்டிக்கு பிறகு வீரர்கள் தங்கும் ஓய்வு அறைக்கு வந்த முன்னாள் கேப்டன் தோனி, இளம் வீரர்களுக்கு ஆலொசனைகள் வழங்கினார். ஓய்வு அறைக்கு வந்த தோனியின் புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி