Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒயிட்வாஷ் இல்லானாலும் ஐம் ஹாப்பி: தோல்வி குறித்து கோலி பேட்டி!!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (12:13 IST)
நேற்று பெங்களூரில் நடந்த நான்காம் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரியேவிடம் தோல்விவுற்றது. இது குறித்து கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார்.


 
 
தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டியில் வெற்றி என்ற புதிய சாதனையை இந்திய அணி படைக்குமென பலர் எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. 
 
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த நான்காம் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 
 
நான்காம் ஒரு நாள் போட்டியில், இந்திய அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய கோலி பின்வருமாறு கூறினார்.
 
2019 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் முனைப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாதவர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 
 
இந்த போட்டியின் தோல்வியின் மூலம், எங்கே தவறு உள்ளது, அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயம் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம். அதனால் தான் வெற்றி கூட்டணியை மாற்றினோம். வெற்றி மட்டுமே நிரந்தரமானதல்ல என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments