Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொசுவிரட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Advertiesment
எல்ஜி
, வியாழன், 28 செப்டம்பர் 2017 (19:57 IST)
எல்ஜி நிறுவனத்தின் கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்தை கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. 


 

 
எல்ஜி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் உடைய ஸ்மார்ட்போன் K7i என்ற மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய மாடல் மொபைல் போன் தற்போது வெளியாகியுள்ளது. 
 
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப பின்புற கவரை பொறுத்திக் கொள்ள முடியும். இதன் பின்புற கவரில் உள்ள ஸ்பீக்கர் அல்ட்ராசோனிக் கதிர்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த கதிர்கள் கொசுக்களை விரட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தொழில்நுட்பமானது 30KHz அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும். மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அல்ட்ராசோனிக் சத்தம் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கூடுதல் கவர் மூலம்  ஸ்மார்ட்போனில் இதை இணைத்துக் கொள்ள முடியும். 
 
மேலும் இந்த மொபைல் போன் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.7,500க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக் மீது டிரம்ப் குற்றச்சாட்டு; விளக்கமளித்த மார்க் ஜூக்கர்பெர்க்