Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி அதை செய்தால்தான் இந்தியா வெல்லும் – மைக்கேல் கிளார்க் சொன்ன யோசனை!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (09:34 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரை வெல்ல ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒரு யோசனை கூறியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார். கோலி டெஸ்ட் போட்டிகளில் இல்லாதது குறித்து கிட்டத்தட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் எல்லோரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ’இந்திய அணி டெஸ்ட் தொடரை வெற்றிப்பெற வேண்டுமானால் கோலி ஒருநாள் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக வழிநடத்தி வெற்றிப் பெறச்செய்ய வேண்டும். அப்போதான் அவர் சென்ற பிறகும் டெஸ்ட் தொடரை இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைக்க முடியும். இல்லையென்றால் 0- 4 என்ற கணக்கில் கூட தோல்வியடைய வாய்ப்புள்ளது’ என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments