Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு பலியான மூத்த காங்கிரஸ் தலைவர்: தொண்டர்கள் அதிர்ச்சி

Advertiesment
அகம்து பட்டேல்
, புதன், 25 நவம்பர் 2020 (07:18 IST)
கொரோனாவுக்கு பலியான மூத்த காங்கிரஸ் தலைவர்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்களையும் பாதிப்பு வருகிறது என்பதை ஏற்கனவே அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
அந்தவகையில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முகமது பட்டேல் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமையில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார் 
 
இதனை அடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது பட்டியலுக்கு மருத்துவர்கள் அதிநவீன சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அவர்களின் மறைவு அக்கட்சியின் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
அகமது பட்டேல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 கோடியை கடந்தது உலக கொரோனா பாதிப்பு!