இந்திய அணியின் கேப்டன் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று அவரை எரிச்சலடைய செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மாலை தொடங்க உள்ளது. இந்நிலைஉஇல் இந்திய அணியின் கேப்டன் கோலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் ‘இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இல்லாமல் பலவீனமாக இருக்கிறது. இப்போது ஆக்ரோஷமாக விளையாடி தொடரை வெல்ல வேண்டிய தருணம் அல்லவா?’ எனக் கேட்டார்.
அந்த கேள்வியால் அதிருப்தியடைந்த கோலி ‘இது சரியான கேள்வி அல்ல. முக்கியமான வீரர்கள் இருந்தாலும் நம்மால் அவர்களை வீழ்த்த முடியும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அப்படி ஒரு அணியிடம் இந்த கேள்வியை கேட்கக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.