நேற்றைய போட்டியில் கோலியின் விக்கெட் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் க்ள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். அந்த அணியில், கிஷான் 26 ரன்களும்,ரோஹித் சர்மா 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. இதில், பிளஸிஸ் 16 ரன்களும், ராவட் 66 ரன்களும், கோலி 48 ரன்களும், மேக்ஸ்வெல் 8 ரன்களும் ஆடிதிது அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியில் கோலியின் விக்கெட் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. கோலி 48 ரன்கள் சேர்த்திருந்த போது எல்பிடபுள் யூ அப்பீல் செய்யப்பட்டு அவுட் ஆனார். அது சம்மந்தமாக கோலி டிஆர்எஸ் கேட்டு அப்பீல் செய்தார்.
இதையடுத்து அல்ட்ரா எட்ஜ் ரிப்ளேவில் பந்து பெட் மற்றும் பேட் இரண்டிலும் ஒரே சமயத்தில் பட்டது. அதையடுத்து அவர் அவுட் என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலை வரும்போது பேட்ஸ்மேனுக்கு சாதமாகதான் முடிவெடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் இது சம்மந்தமாக டிவிட்டரில் நடுவர்களை திட்டியும் விமர்சித்தும் வருகின்றனர்.