Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா எதற்கு? கோலி பதில்...

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (17:53 IST)
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏன்? அதுவும் ரஹானேயை நீக்கி விட்டு ஏன் ரோகித்தை சேர்க்க வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு கேப்டன் கோலி பதிலளித்துள்ளார். கோலி கூறியதாவது, ரோஹித் சர்மா இந்த டெஸ்ட்டுக்கு முந்தைய 3 போட்டிகளில் ரன்கள் எடுத்தார். மேலும் நன்றாக விளையாடினார். 
 
கிரிக்கெட் வீரரின் நடப்பு ஃபார்மை வைத்தே அணிச்சேர்க்கை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில்தான் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் பேட்டிங் சொதப்பலால்தான் தோல்வி அடைந்தோம். 
 
பிட்ச் உண்மையில் அருமையாக இருந்தது. உண்மையில் எனக்கு இந்தப் பிட்ச் பிடித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அருமையான பிட்ச். இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதை பெருமையாக கருதுகிறேன். தொடருக்கு இந்த டெஸ்ட் அருமையான தொடக்கம் இது. ஆனாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெருவோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments