நேற்றைய நாளில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது ஏதோ உலகமே அழிந்துவிட்டது போன்ற சோக நிகழ்வு போல ஊடகங்கள் ஊதி பெருக்கி வருகின்றன.
கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.
இதேபோல நேற்று போட்டி முடிந்ததும் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு இஷான் கிஷானை அணியில் எடுப்பீர்களா என்று கேட்க, அதற்கு கோலில் நீங்கள் ரோஹித் ஷர்மாவை ஒரு டி 20 போட்டியிலிருந்து நீக்க முடியுமா? உங்களுக்கு சர்ச்சையான பதில்கள் வேண்டுமென்றால் கேளுங்கள். அதற்கேற்றார்போல பேசலாம். எல்லா போட்டிகளையும் நாமே வெல்வோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனக் கூறியுள்ளார்.