Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் ஏலம்: அஸ்வினை வாங்கிய கிங்ஸ் XI பஞ்சாப்; கோட்டை விட்ட சிஎஸ்கே!

Advertiesment
ஐபிஎல் ஏலம்: அஸ்வினை வாங்கிய கிங்ஸ் XI பஞ்சாப்; கோட்டை விட்ட சிஎஸ்கே!
, சனி, 27 ஜனவரி 2018 (11:22 IST)
ஐபிஎல் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவுள்ள நிலையில், அணி வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தங்களுக்கு தேவையான வீரர்களை  அணிகள் வைத்துக்கொண்டனர். 
 
இந்த ஏலத்தில் அஸ்வினை சிஎஸ்கே அணி வாங்கிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிஎஸ்கே அணியின் ஆஸ்தான வீரர்கள் தோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா ஆவர். இதில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொண்ட நிலையில், அஸ்வின் ஏலம் மூலம் எடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தோனியும் அஸ்வின் நிச்சயம் அணியில் சேர்க்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார். 
 
ஏலத்தில் அஸ்வினுக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.7.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டும் ஏலத்தின் போதும் கூட அஸ்வினை ஏலத்தில் எடுக்க பெங்களூர் அணி பல முயற்சிகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. 
 
அஸ்வினை ஏலத்தில் எடுக்க சென்னை அணி தனக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அதிக முயற்சி எடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்வா சாவா கட்டத்தில் இந்தியா: தெ.ஆ அணிக்கு 241 ரன்கள் இலக்கு!