Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வினை ஏலத்தில் எடுப்போம்: தோனி நம்பிக்கை!!

Advertiesment
அஸ்வினை ஏலத்தில் எடுப்போம்: தோனி நம்பிக்கை!!
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (16:56 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் நிறைவடைந்ததை அடுத்து, இரண்டு வருட தடை முடிந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது சிஎஸ்கே அணி. இதனால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
சிஎஸ்கே அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆனால், தமிழக வீரர் அஸ்வின் அணியில் தக்கவைக்கப்படாடது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சில விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் ஆங்காங்கே காணப்பட்டது. இதையடுத்து தோனி சிஎஸ்கே-யில் மீண்டும் விளையாடுவது குறித்து பேசியுள்ளார். 
 
தோனி கூறியதாவது, வலிமையான அணியை தேர்வு செய்வதே எங்களது நோக்கம். அஸ்வினை நிச்சயம் ஏலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியில் உள்ளூர் வீரர்கள் இடப்பெறுவது அவசியம் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை கவர புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஐபிஎல்