Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! ஒரே நாளில் 6 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ்நாடு!

Prasanth Karthick
புதன், 24 ஜனவரி 2024 (08:37 IST)
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் ஒரே நாளில் 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.



6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடியால் கடந்த 19ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்று போட்டியின் 5வது நாளில் தமிழகம் 5 தங்கப்பதக்கங்களை வென்றது. 110 மீட்டர் தடை ஓட்டம், 400 மீ ஓட்டம், ஸ்குவாஷ், பெண்களுக்கான தனிநபர் சைக்கிளிங் பர்சுயிட் 10 கி.மீ ஸ்க்ராட்ச் மற்றும் யோகாசனம் ஆர்டிஸ்டிக் ஜோடி ஆகிய போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

நேற்றைய போட்டியின் முடிவில் தமிழ்நாடு மொத்தமாக 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா 14 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments