Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவுக்குக் கடன் பட்டிருக்கிறேன் – கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி!

Advertiesment
இந்தியாவுக்குக் கடன் பட்டிருக்கிறேன் – கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி!
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:20 IST)
இந்தியாவுக்கு நான் நிறையக் கடன் பட்டிருக்கிறேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் நாளை பலவிதமானக் கட்டுப்பாடுகளுடன் தொடங்க உள்ளது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையிலும், பணத்துக்காக வீரர்களைப் பணயம் வைத்து பிசிசிஐ இந்த தொடரை நடத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஐபிஎல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

அவர் ‘ பயோ செக்யூர் கரோனா தடுப்புக் குமிழிக்குள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் அணிதான் வெற்றி பெறும். என்னால் எந்த அணி வெற்றி பெறும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் என் மனது டெல்லி கேப்பிடல்ஸ் அணி என்று சொல்கிறது. ஐபிஎல்-ஐ நேசிக்கிறேன். இந்தியா எனக்கு அளித்ததை என்றும் மறக்க மாட்டேன். இந்தியப் பண்பாட்டை என்னை நேசிக்க வைத்தது என் அதிர்ஷ்டமே. அது போல இந்தியாவில் நிறைய நெகிழ்ச்சியான நட்புகளை சந்தித்தேன். இந்தியாவால் நிதியளவிலும் உணர்வு ரீதியாகவும் பெரிய அளவில் பயனடைந்துள்ளேன் இந்தியாவுக்கு நான் நிறைய கடன் பட்டிருக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? உச்சத்தில் கோலி!