Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

29 பந்துகள் வீசி 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீராங்கனை!

Advertiesment
29 பந்துகள் வீசி 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீராங்கனை!
, செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (19:08 IST)
29 பந்துகள் வீசி 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீராங்கனை!
சண்டிகரை சேர்ந்த இளம் வீராங்கனை ஒருவர் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 
19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த ஒரு போட்டியில் சண்டிகர்-அருணாச்சல பிரதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் சண்டிகர்வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
 
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து. பின்னர் 187 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி காஷ்வி கவுதமின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 25 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய காஷ்வி கவுதம் மொத்தம் 25 பந்துகள் மட்டுமே வீசி அருணாசல பிரதேச அணியின் மொத்தம் உள்ள பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்து சாதனை படைத்தார். இதனையடுத்து காஷ்விக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!