இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திரிபுரா மாநில முதல்வரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய கொரோனா பரவலில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களுமே பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.