டெஸ்ட் தொடரில் விளையாடுவதை விட மகனைக் கையில் ஏந்துவதையே கோலி விரும்புகிறார் – கபில்தேவ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:42 IST)
கோலி மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்புவது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘ கோலி டெஸ்ட் தொடரை விட தன் மகனை கையில் ஏந்துவதையே விரும்புகிறார். அதை நான் மதிக்கிறேன். ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி நினைத்த நேரத்தில் வரமுடியாது. ஆனால் இப்போது ஒரு வீரர் ஒரு விமானத்தையே வாங்கி குடும்பத்தோடு செல்ல முடியும். கவாஸ்கர் தனது மகன் பிறந்த போது அவரை பல மாதங்களுக்குப் பார்க்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments