Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் கோலி கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும்… கபில்தேவ் அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (16:46 IST)
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி அமைதியாக விளையாடினால் பிரகாசிப்பார் என கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்களில் கோலியின் பேட்டிங் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதுபற்றி பேசியுள்ள கபில்தேவ் ‘கோலி நிச்சயமாக இங்கிலாந்தில் பிரகாசிப்பார். சூழ்நிலைகேற்ப தகவமைத்துக் கொள்வதில் அவர் கெட்டிக்காரர். ஆனால் அவர் அதிகமாக ஆக்ரோஷமாக விளையாடக்கூடாது. தன் ஆதிக்கத் தருணத்துக்காக அவர் காத்திருந்தால் நல்லது. இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர் எடுத்த உடனேயே ஆதிக்கம் செலுத்த முடியாது. ஏனெனில் இங்கிலாந்தில் ஸ்விங் ஆகும் பந்துகளை அவர் அவதானிக்க வேண்டும். இங்கிலாந்து அணி அவர்கள் நாட்டில் கடினமான அணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments