என்னால் திரும்ப கிரிக்கெட் விளையாட முடியுமா என்று பயந்தேன்… அஸ்வின் உருக்கம்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (13:07 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் குடும்பத்தில் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிர்ச்சேதம் இன்றி குணமாகி வந்துள்ளனர். இதையடுத்து பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ஐபிஎல் விளையாடும்போது என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அதனால் தொடரில் இருந்து விலகி குடும்பத்துடன் இருப்பது என முடிவெடுத்தேன். அதனால் என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்றுகூட யோசித்தேன். ஆனால் அனைவரும் சிகிச்சையில் எப்படியோ குணமாகிவிட்டனர். அப்போதுதான் எனக்கு மீண்டும் விளையாடலாம் என்ற நம்பிக்கை வந்தது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments