Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வீழ்த்த இந்தியாவின் சி டீம் போதும்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:57 IST)
இந்திய அணி இப்போது இருக்கும் வீரர்களைக் கொண்டு 3 அணிகளைக் கூட உருவாக்கலாம் என பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இன்னும் சில நாட்களில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 மாதங்கள் தங்கி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மல் இந்தியாவின் சி டீம் கூட இலங்கை அணியைத் தோற்கடிக்கும் எனக் கூறியுள்ளார்.

அதில் ‘இந்தியாவிடம் தற்போது கிரிக்கெட் உள்கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இலங்கைக்கு 3ஆவது அணியை உருவாக்கி அனுப்பினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். டிராவிட் அடிதளத்தில் இருந்து வீரர்களை உருவாக்கி அனுப்புகிறார். அதை ரவி சாஸ்திரியும் கோலியும் மெருகேற்றுகின்றனர். வீரர்கள் இல்லை அல்லது காயம் என்ற கவலையே பிசிசிஐக்கு இருக்காது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments