Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு 15 கோடியா? வாயைப் பிளந்த நியுசிலாந்து வீரர்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (08:45 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் நியுசிலாந்து அணியின் ஜேமிசனும் ஒருவர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேமிசன் பெங்களூர் அணியால் 15 கோடிக்கு எடுக்கப்பட்டார். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவருக்கு இவ்வளவு தொகையா என அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தனக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது குறித்து பேசியுள்ள ஜேமிசன் ‘எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 15 கோடிக்கு எவ்வளவு நியுசிலாந்து டாலர்கள் என நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கணக்கு போட்டு பார்த்தேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments