முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி

சனி, 8 செப்டம்பர் 2018 (19:40 IST)
5வது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் 322 ரன்கள் குவித்துள்ளது.

 
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
 
நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்து இருந்தது. 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர் - பிராட் இங்கிலாந்து அணியைஅ வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியின் ஆட்டம் இங்கிலாந்து அணியை 300 ரன்கள் கடக்க உதவியாய் இருந்தது.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர் தவான் வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேறிவிட்டார். தற்போஒது ராகுல் - புஜாரா ஆடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இங்கிலாந்து அணியை மீட்ட பட்லர், பிராட்