பண்ட் அடித்த அடியில் இனி கிரிக்கெட் விளையாடுவோமா என அஞ்சினேன்… இங்கிலாந்து பவுலர் பகிர்ந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:58 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் அதிரடியால் இனி கிரிக்கெட் விளையாடுவோமா என்ற சந்தேகத்துக்கு ஆளானேன் எனக் கூறியுள்ளார் ஜாக் லீச்.

இங்கிலாந்து அணி முதல்  டெஸ்ட்டை வென்ற போதிலும் முதல் இன்னிங்ஸில் பண்ட் ஆடிய அதிரடி ஆட்டம் இங்கிலாந்து பவுலர்களை திணறவைத்தது. அதிலும் அந்த அணியின் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ஜாக் லீச் பந்தில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி தெறிக்கவிட்டார். அதுபற்றி இப்போது பேசியுள்ளார் லீச்.

அதில் ‘மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் பண்ட் அதிரடியை பார்த்து இனி கிரிக்கெட் விளையாடுவோமா என்ற அச்சத்துக்கு ஆளானேன். ஆனால் அதன் பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தேன். வெற்றி பெற்ற போது கலவையான உணர்வுகளுக்கு ஆளானோம். அதுதான் கிரிக்கெட்டை நாங்கள் நேசிக்கக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments