உத்தரகாண்ட் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து திடீரென வாசிம் ஜாபர் பதவி விலகிய நிலையில் அதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 30க்கும் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர். இவர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாசிம் ஜாபர் மதத்தின் அடிப்படையில் விளையாட வீரர்களை தேர்ந்தெடுத்ததாக சங்கத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜாபர், சிபாரிசு என்ற பெயரில் தகுதி இல்லாத வீரர்களை அணிக்குள் சேர்க்க நிர்பந்திப்பதாகவும், தன்னை தொடர்ந்து மத ரீதியான அவமதிப்பிற்கு உள்ளாக்கியதாகவும், அதனால் பதவி விலகியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.