Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த முறை அவரிடம் கவனமாக இருப்போம்… பண்ட் பற்றி பேசிய ஆஸி பந்து வீச்சாளர்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:11 IST)
ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்திய அணியின் கீப்பர் பண்ட் ஒரு கிளாஸான வீரர் என புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து கம்மின்ஸ் 21 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். டெஸ்ட் பவுலர்களின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கம்மின்ஸ் தான் அதற்கு முழுதும் தகுதியானவரே என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்.

இந்நிலையில் அந்த தொடர் குறித்து இப்போது அவர் அளித்த நேர்காணலில் ‘காபா டெஸ்டில் புஜாரா இருக்கும் வரை ஆட்டம் வேகமாக நகரவில்லை. ஆனால் பண்ட் வந்ததும் ஆட்டம் வேகம் பிடித்தது. அது ஒரு அற்புதமான தருணம். எல்லாம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்த நிலையில் எல்லாமே மாறிப் போனது. பண்ட் ஒரு கிளாஸான கிரிக்கெட் வீரர். அவருக்கு எப்போது அட்டாக்கிக் பிளே ஆட வேண்டுமென்பதும் தெரியும். அடுத்த முறை அவருக்கு பந்துவீசும் போது இன்னும் கவனமாக இருப்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments