Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது வாழ்க்கையை படமெடுத்தால் கவுரவமே - சானியா மிர்ஸா

Advertiesment
எனது வாழ்க்கையை படமெடுத்தால் கவுரவமே - சானியா மிர்ஸா
, புதன், 20 ஜூலை 2016 (05:48 IST)
எனது வாழ்க்கை வரலாறு குறித்த படம் எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

 
நீண்ட நாட்களாக மகளிர் இரட்டையர் போட்டிகளில், சர்வதேச தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளவர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா. இவர், Ace against Odds எனும் சுயசரிதை நூலினை எழுதியுள்ளார். அந்த நூலினை சல்மான் கான் வெளியிட்டார்.
 
அப்போது சானியா மிர்ஸா பேசுகையில், ”என்னால் சினிமாவில் நிச்சயம் நடிக்க முடியும். இந்த நம்பிக்கை தனக்கு நீண்ட நாட்களாகவே இருந்துள்ளது. ஆனால், தற்போதைக்கு அப்படியான எண்ணம் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ’எனது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் எடுக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது. அப்படி எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன்.
 
சினிமா தயாரிப்பாளர் பராக் கான் எனக்கு நல்ல நண்பர். அவர் என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் கிடையாது. எனது கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ப்ரீணி சோப்ரா நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்