ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதில் 10 அணிகள் விளையாட உள்ளன என்பதும் அணிகளின் வீரர்களின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விளையாடும் அணிகளில் ஒன்றாகிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2023 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் டி20 போட்டித் தொடரின் ஹைதராபாத் உரிமைக்குழுவின் பெயராகும். அணியின் தலைவராக நியூஸிலாந்து நாட்டின் கேன் வில்லியம்சன் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளராக ஆஸ்திரேலியவின் டிரெவர் பெய்லிஸ் ஆகியோர் செயல்பட்டனர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மாற்றாக 25 அக்டோபர் 2012 முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்டது. பழைய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வீரர்கள், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினர். 2016 ஆம் ஆண்டு இவ்வணி இறுதிப்போட்டியில் வென்று வாகை சூடியது. கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.