Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:33 IST)
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. நேற்றைய போட்டியில் கே எல் ராகுல் 41 ரன்கள், ஸ்டாப்ஸ் 34 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியின் புவனேஷ் குமார் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெடுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதன் பின், கடைசி நேரத்தில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 73 ரன்கள் அடித்த நிலையில், 18.3 ஓவர்களில் பெங்களூர் அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. க்ருணால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து, 10 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளை பெற்ற முதல் இடத்தில் உள்ளன. குஜராத், மும்பை, டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியல் சிஎஸ்கே கடைசி இடத்தில் பரிதாபமாக உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments