இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்று நாற்பத்தி எட்டாவது போட்டி குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே
மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதனை அடுத்து பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளன
இந்த நிலையில் இறுதிப் போட்டிகள் நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்
ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் அகமதாபாத் மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடக்கும் என்றும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்