Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகல்: விஜய்சங்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (19:08 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியபோது அருமையாக விளையாடி சதமடித்த தவான், அந்த போட்டியின் இடையே காயம் அடைந்தார். இருப்பினும் அவர் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மட்டும் ஆடமாட்டார் என்றும், அதன்பின் அணியில் மீண்டும் இணைந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது
 
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு பதில் தமிழக வீரர் விஜய்சங்கர் களமிறக்கப்பட்டார். இந்த போட்டியில் விஜய்சங்கர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தினார்.
 
இந்த நிலையில் தவானுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புவனேஷ்குமார் காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது தவானும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது
 
இருப்பினும் தவான் மற்றும் புவனேஷ்குமார் இடங்களை கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர்களில் இருவர் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய்சங்கருக்கு அடித்த அதிர்ஷ்டமாகவே இதனை பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments