Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பிக்குமா தென் ஆப்பிரிக்கா ? –நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் மழை !

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (15:47 IST)
நியுசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடக்க இருந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பையின் 25 ஆவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோத இருக்கின்றன. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கனவே 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகளில் தோல்வியும் 1 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒருப் போட்டியில் மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. எனவே மீதியுள்ள 4 போட்டிகளையும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நியுசிலாந்துக்கு எதிராக 6 ஆவது போட்டியை விளையாட இருந்த நிலையில் மைதானத்தில் மழைப் பெய்து வருவதால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதிக் கனவு மங்கலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments