18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 4-5 என்ற கோல்கணக்கில் தோல்வியை சந்தித்தது. கடைசி ஆட்டத்தில் 11-0 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை பந்தாடி அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் வீரர்களான பங்கோ சிங், தில்பிரிதித் சிங் ஆகியோர் இந்த தொடரில் தலா 4 கோல்கள் அடித்து அசத்தியுள்ளனர்.
தற்போது, இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் இரண்டு முறை பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.