நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக மூத்த வீரர் கவுதம் காம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் கவுதம் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள கவுதம் காம்பீரின் விளையாட்டை காண்பதற்கும் பலரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11பேர் அடங்கிய இந்திய வீரர்கள் அணியில் காம்பீரின் பெயர் இடம்பெறவில்லை.
கே.எல் ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் காம்பீர்ன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதே போல் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஹரியானாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.