Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப்போட்டி - வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:36 IST)
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியுற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார்.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின், பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சீன வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார். இவர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை தோற்கடித்தவர் ஆவார்.
 
ஆட்டத்தின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார் தாய் டிசுயிங். சிந்து கடுமையாக முயற்சி செய்த போதிலும், தாய் டிசுயிங் 21-13 21–16 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சிந்துவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
 
வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments