Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அசத்தல்: காலிறுதிக்கு முன்னேற்றம்

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (07:58 IST)
ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அசத்தல்: காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள சென்ற நிலையில் தற்போது ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தாலும் இன்னும் ஒரு சில பழக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பிவி சிந்து, தீபிகா குமாரி, பூஜா ராணி, மேரிகோம் உள்பட ஒருசில வீராங்கனைகள் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற அர்ஜென்டினா அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய அணி கடைசி மூன்று நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி உள்ளது
 
இந்தியாவின் விவேக் பிரசாத், வருண்குமார் , ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் அபாரமாக ஆடி கோல் அடித்தனர். இந்திய ஹாக்கி அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பதும், இந்திய அணிக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments