Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

Mahendran
திங்கள், 7 ஏப்ரல் 2025 (18:36 IST)
பிரேசிலின் பிரேசிலியா நகரில் உலக குத்துச்சண்டை கோப்பை அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 19 நாடுகளைச் சேர்ந்த 130 பேர் பங்கேற்றனர்.
 
இந்த விறுவிறுப்பான போட்டியில், 70 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஹிதேஷ் தனது திறமையை வெளிப்படுத்தி, அரையிறுதியில் பிரான்சைச் சேர்ந்த மகான் டிராரியை 5-0 என  தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
 
இறுதியில், அவர் இங்கிலாந்தின் ஒடெல் கமாராவுடன் மோதவிருந்த நிலையில், கமாரா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால், ஹிதேஷ் போட்டியின்றியே தங்கப்பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம், ஹிதேஷ் உலக குத்துச்சண்டை கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று குரலுக்கு இடமளித்துள்ளார்.
 
மேலும், இந்த தொடரில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று பாராட்டை பெற்றுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments