Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2007 செப் 24: டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற தினம் இன்று!

Advertiesment
2007 செப் 24: டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற தினம் இன்று!
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:13 IST)
2007 செப் 24: டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற தினம் இன்று!
கடந்த 2007ஆம் ஆண்டு 13 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் முதன்முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்த நாள்
 
ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய நாள் இன்று. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
 
இந்தப் போட்டியில் தோனியின் வித்தியாசமான முடிவுகள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். குறிப்பாக கடைசி ஒவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. நிதானமாக ஆடியிருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக் அடித்த ஒரு தவறான ஷாட் கேட்சாகி இந்தியா வென்றது
 
மிஸ்பா-உல்-ஹக்  அவுட் ஆகும் அந்த பந்துக்கு முந்தைய பந்தின்போதுதான் தோனி ஃபீல்டிங்கை மாற்றினார் என்பதும், அதனால்தான் கேட்சாகி அவர் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கேட்ச் இன்றளவும் மறக்க முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்ற 13வது ஆண்டு தினத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் -2020 போட்டி வர்ணனையாளர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி